பிரச்சனைகளைத் தீர்க்க / problems solving 




பிரச்சனைகள் 

                    இன்று பரபரப்பான சூழ்நிலையில் உலக வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கின்றது. இன்று எனது வாழ்வில் பல பிரச்சனைகள் உண்டு.
             வீடு, தெரு, ஊர்,  உறவு,  நண்பன்,  வேலை செய்யும் இடம் எனப்பல பிரச்சனை.             ஏதாவது ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது. பிரச்சனையை நினைத்துத் தூக்கம் வரவில்லை. 
                           எனக்கு ஏதாவது  தீர்வு சொல்லுங்கள் ஐயா என்றவாறே அந்தப் பெரியவரிடம் கேட்டானாம் ஒருவன். 

பிரச்சனைக்கு முனிவரின் தீர்வு 

                         அவர்கள் இருவரும் பேசியது இரவு  நேரம். பெரியவர் அவனிடம் "பின்புறமுள்ள  இருக்கும் மாட்டுத்தொழுவம் சென்று எத்தனை மாடுகள் உள்ளது? அவை என்ன செய்துக் கொண்டு உள்ளன? எனப்பார்த்துவிட்டு வா" என்றுக் கூறினார். 
                 மாட்டுத்தொழுவத்திற்குச் சென்று திரும்பி வந்து நூறு மாடுகள் இருக்கிறது. எல்லா மாடுகளும் நின்று கொண்டு இருக்கின்றன" என்றான்.
                    "நல்லது. உனக்கு இன்று ஒரு சின்ன வேலை தர்றேன். நீ அந்த நூறு மாடுகளையும் தூங்க வைக்கணும். 
                   அந்த நூறு மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிறச் சின்ன ஓய்வறையில் நீ போய் ஒய்வு எடுக்கலாம். 
               ஆனால் அந்த நூறு  மாடுகளும் படுத்துத்தூங்க வேண்டும் அதுதான் முக்கியமனது. புரிந்தாத? இந்தச் செயலைச் செய்துவிட்டு காலையில் திரும்பி வா" என்றார்.

பிரச்சனையைத் தீர்க்கக்கற்றுக் கொண்ட பாடம் 

            "சரி ஐயா" என்றுச் சொல்லி விட்டு மாட்டுத்தொழுவத்திற்கு சென்றவன் இரவெல்லாம் இருந்துவிட்டு. கண்களில் தூக்கத்தோடுக் காலையில் களைப்புடன் மீண்டும் வந்து "ஐயா இரவு முழுவதும் தூங்க முடியாமல் போனேன்" என்றான்.
               "ஏன்? என்ன ஆனது?" என்றார் பெரியவர்.
         நூறு மாடுகளையும் படுக்க வைக்கப் பலமுயற்சிகள் செய்தேன். நான் படாத பாடுகள் பட்டும் மாடுகள் தூங்க வைக்க இயலாமல் போனது. 
                சில மாடுகள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் எல்லா  மாட்டையும் என்னால் ஒரே நேரத்தில் என்னால் படுக்கவைக்க இயலவில்லை.
                       சில மாடுகள்  படுத்தால் சில மாடுகள் எழுந்து கொள்கின்றன. அனைத்து மாடுகளையும்  ஒட்டு மொத்தமாகப் படுக்க வைக்க இயலவில்லை.
                    அதனால் தான் தூங்குவதற்கு செல்லவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லையென்றான் அவன்.

பிரச்சனைகளும் மாடுகளும் 

                   இவன் சொல்வதைக் கேட்ட பெரியவர் சிரித்தபடியே... இதுதான் நாம் வாழும் வாழ்க்கை. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளைத் தூங்க வைப்பதற்குச் சமம். சில பிரச்சனை தானாக முடியும். சிலவற்றை நாம் முடித்துவிடலாம். ஆனால் சில பிரச்சனை முடிந்தால் வேறுசில பிரச்சனை புதிதாக வரும்.
                          நம்முடைய எல்லா பிரச்சனையும் முடியும்போது தான் திருப்தியாக உறங்க முடியுமென்றால் இந்தப் பூமியில் எவராலும் உறங்கச் செல்ல இயலாது.
            பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் எனக்கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே. இன்று  தீர்க்கக் கூடியவற்றை இன்று தீர்த்துவிடுங்கள். மற்றவற்றை தீர்க்க வேண்டிய காலத்தை எதிர்பார்த்து அமைதியாக இருங்கள்" என்றுக் கூறினார் பெரியவர். 

பிரச்சினைகளின் தீர்வு

           பெரியவரை வணங்கிவிட்டுச்சென்றவன் சிலஆண்டுகள் கழித்து வந்தான். பெரியவரிடம் என்னால் தீர்க்க முடிந்த "சில பிரச்சினைகளை நானே தீர்த்து விடுகிறேன், தீர்க்க முடியாத சில பிரச்சினையைக் காலத்தை எதிர்ப்பார்த்து இருகிறேன்".
           "இப்போதும் எனக்குச்சில பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது என்றாலும் நான் நிம்மதியாகப்படுத்து உறங்குகிறேன்" என்று அவர் கூறினார். 


கதை சொல்லும் நீதி

          வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு மாடுகளுக்குச் சமமானது. 
     அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவு தான். 
         ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் தனித்தனியாக உள்ளது.
             அதுபோல நமக்கான பிரச்சனைத் தீர்வதற்கான நேரகாலமும் உண்டு. 
                ஆகவே சில பிரச்சினைகளை நினைத்துக் கவலையடையாமல் தீர்ப்பதற்காக  நம் பகுத்தறிவிடம் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக வாழ்வோம். 
            நம்  வாழ்வு பிரச்சனையாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நம் செய்யும் செயலும் மனமும் தான் காரணம்.
        இந்த அற்புதம் அறிந்து கொண்டால் அமைதியாய் வாழலாம்.
              அதிகமாகப்படிக்க Read more

இந்தப்படத்தைத்  தொட்டு game பார்க்கலாம்.