பாகற்காயும் புண்ணிய யாத்திரையும்

ஞானியை நாடி வந்தவர்

             ஒரு அழகான கிராமத்தில் ஞானி ஒருவர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். அந்த  ஞானியைப் பார்க்க நால்வர் வந்தனர். நாங்கள் நால்வரும் புண்ணிய யாத்திரை  சென்று புனித நதிகளில்  நீராடி வரலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
            நீங்களும் எங்களோடு வந்தால் எங்களுக்குத் திருப்தியாக இருக்கும் என்று வந்தவர்கள் அவரை அழைத்தார்கள்.
             ஞானியோ, இப்போது நான்  வருவதாக இல்லை என்று கூறி விட்டார்.
         அனைவரும் மரத்தின் அடியில் அமர்ந்து இளைப்ப்றுங்கள் என்றார்.

ஞானி வந்தவர்களுக்குத் தந்தது

            ஞானியைப் பார்க்க வந்தவர்களிடம் ஒரு பச்சைநிறப் பாகற்காயைத் தந்தார்.  ''எனக்காக ஒரு உதவி உங்களால்  செய்யமுடியுமா?'' என்று அவர்களைப்பார்த்து ஞானி கேட்டார்.
        அவர்கள் 'என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் ஞானியே' என்றார்கள்.
         ''ரொம்ப பெரிய வேலை எல்லாம் கிடையாது.
                  நீங்கள் புனித நதியில் நீராடும்போது நான் கொடுத்துள்ள பச்சைநிறப் பாகற்காயையும் புண்ணிய நதிகளில் முழ்கச்செய்து  என்னிடம்  திரும்பக்கொண்டு வந்து தாருங்கள்'' என்றார்.

ஞானி சொன்னதைச் செய்த நால்வர் 

          அந்த நால்வரும்  ஞானி சொன்ன மாதிரியேச் செய்தனர்.
      புண்ணிய நதிகளில் நீராடிப்பின்னர் நால்வரும் ஊர்த்திரும்பினர். மீண்டும் ஞானியின் ஆசிரமம்  வந்து அவரிடம் அந்தப் பச்சைநிறப் பாகற்காயைப் பாதுகாப்பாகக் கொடுத்தனர்.
         அந்த ஞானி அவர்கள் கொண்டு வந்த பச்சைநிறப் பாகற்காயை அவர்கள் முன்னிலையில் சின்னச்சிறுத்துண்டுகளாகக் கத்தி வைத்து நறுக்கினார். நறுக்கியத் தூண்டி  எல்லாருக்கும் ஆளுக்கொருத் துண்டைக் கொடுத்தார்.
         அவர்கள் சென்ற ஒவ்வொரு புனித நதியில் முழ்கச் செய்து வந்தப் பாகற்காய்.
இப்போது இதைச்சாப்பிட்டுப் பாருங்கள். இந்தப் பாகற்காய் தித்திக்கிறதா என்றார்.
    அந்தப் பாகற்காயை நால்வரும் ஆர்வமுடன் வாங்கி வாயில் போட்டு மென்றனர். உடனே அவர்கள் போட்ட வேகத்தில் முகம் மாறிப்போனது.
               நீங்கள் தித்திக்கும்னு சொன்னீங்க. ஆனா அந்தப்பாகற்காய் கசக்குதே என்றார்கள். ஞானியை அந்த நால்வரும்  ஏமாற்றத்துடன் பார்த்தார்கள்.

கதையின் உட்பொருள் விளக்கம் 

                 பாகற்காய் எத்தனை புண்ணிய  நதியில் முழ்கினாலும்,  அதன் சுவையான கசப்பை மாற்றிக் கொள்ளவில்லை.
            அதைப் போலவே நாம் நமது தவறான செயல்களையும், தீய பழக்கங்களையும், கெட்ட குணங்களை மாற்றிக் கொள்ளாமல் எத்தனைப் புண்ணிய நதிகளில்  ஆயிரம் முறை முழ்கி குளித்தாலும் மாறாது. எத்தனைக் கோயிலுக்குச் சென்று 108 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும், எந்தப் பயனும் உங்களுக்கு வந்து விடப் போவதில்லை.
       மாற்றங்கள் என்பது  உங்கள் மனங்களிலும், குணங்களிலும், வந்தால் தான் உங்கள் வாழ்வும், இந்தச் சமுதாயமும் இனிமையான பூச்சோலையாகும் என்றார் அந்த ஞானி. மேலு‌ம் இது போன்ற கதைகள் படிக்க Read more